நான் என்பது யாரோ | தமிழ் வரிகள் | Jaanu Tamil | Journey Tamil | Nan Enbathu Yaro Tamil Lyrics | 96

Details
Title | நான் என்பது யாரோ | தமிழ் வரிகள் | Jaanu Tamil | Journey Tamil | Nan Enbathu Yaro Tamil Lyrics | 96 |
Author | Tamil Song Lyrics |
Duration | 6:04 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=WAhQ_eR-Els |
Description
#நான்_என்பது_யாரோ
பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே.. மனமே..
#தான்_என்பது_போகும்
பெருங்கணத்தினிலே.. கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
#ஆழ்_என்பது_மெய்ஞான_போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே..
#ஆறறிவென்றே_அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
#யார்_உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
#தாய்_தூங்கும்_அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..
#பேரெல்லையில்_உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே..
#நான்_எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
#சீறும்_புலியைப்_பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்
#வாகாய்_வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய்
ஆகிறேன்
தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்
போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்
ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே.