mantram vandha thendralukku lyrics | மன்றம் வந்த தென்றலுக்கு | SPB | Ilayaraja | மௌனராகம் | lyrics

Details
Title | mantram vandha thendralukku lyrics | மன்றம் வந்த தென்றலுக்கு | SPB | Ilayaraja | மௌனராகம் | lyrics |
Author | Tamil Songs Lyrics |
Duration | 4:51 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=SiAMGfTUfvg |
Description
இசை :இளையராஜா
பாடகர் :SPB
படம் :மௌனராகம்
பாடல் :மன்றம் வந்த தென்றலுக்கு
வரிகள் :வாலி
நடிகர்கள் :மோகன்,ரேவதி
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே.. என் கண்ணே
பூபாளமே..
கூடாதென்னும்
வானம் உண்டோ
சொல்…
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
தாமரை மேலே
நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும்
வாழ்வதென்ன
நண்பர்கள் போலே
வாழ்வதற்கு
மாலையும் மேளமும்
தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான்
என்ன..
சொல்……
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
மேடையைப் போலே
வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும்
விலகிச் செல்ல
ஓடையைப் போலே
உறவும் அல்ல
பாதைகள் மாறியே
பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால்
என்ன..
வா..
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே.. என் கண்ணே
பூபாளமே..
கூடாதென்னும்
வானம் உண்டோ
சொல்…
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே.. என் அன்பே